தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில், அரசாணை 149ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான கே.எம்.கார்த்திக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசினார்.
அது மட்டுமல்லாமல், ஆசிரியர் சங்கத்தின் தேனி மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தியவாணி பேசுகையில், “நான் 16 வயதில் இருந்து விஜய் ரசிகை. அவர் சினிமாவில் மனிதன் என்றால், பொது வாழ்க்கையில் மாமனிதன். நிச்சயம் அவரால் நமக்கு நல்லது நடக்கும்” எனப் பேசியது, ஆசிரியர்களிடம் கைதட்டலைப் பெற்றுத் தந்தது.
இவ்வாறு திமுக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்ற தவெகவினரால் வழக்கமான அரசியலே தோன்றுவதாக அரசியல் மேடையில் பேசப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து பிரபல தனியார் நாளிதழிடம் பேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.இளங்கோவன், “நான் மதுரை பழங்காநத்தம் திமுக மாணவரணி துணை அமைப்பாளராக எட்டு ஆண்டு காலம் இருந்துள்ளேன்.
இவ்வாறு இருந்தும் என்ன பயன்? இந்த ஆட்சியைக் கொண்டு வர நாங்கள் பக்கபலமாக இருந்துள்ளோம். ஆனால், திமுக ஒன்றிரண்டு பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. சொன்னது எல்லாமே பொய்தான். நடப்பது கலைஞர் ஆட்சியே இல்லை. தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை.
இதையும் படிங்க: 8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!
அதிமுக ஆட்சியில் 28 போராட்டங்களை நடத்திய நாங்கள், திமுக ஆட்சியில் 52 போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். திமுககாரனைத் தவிர்த்து வேறு யாராலும் எங்களை வீழ்த்த முடியாது என ஸ்டாலின் கூறுவார். இப்போது போராடி வரும் நாங்கள் அனைவரும் ஒரு காலத்தில் திமுககாரர்கள்தான் என்பதை அவர் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.