அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்… அமித்ஷாவுக்கு விஜய் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2024, 5:38 pm

இந்த காலத்துல அம்பேத்கர் பெயரை உச்சரிப்பது பேஷனாகிவிட்டது, அத்தனை முறை அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பகவான் பெயரை கூறியிருந்தால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதா?

அவரது பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்க: உயர்மின் கோபுரத்தில் பணி செய்த போது எதிர்பாரா விபத்து : உடல் கருகி பலியான ஷாக் காட்சி!

அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

Vijay Strongly Condemns Amit shahs Comment

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!