இதெல்லாம் சகஜம்.. “விஜய் சார் பிடிக்கும்.. எனக்காக செஞ்சான்”.. பஞ்சாயத்து ஓவர்..!

Author: Vignesh
22 June 2024, 5:18 pm
boy fire
Quick Share

நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அவரது ரசிகர்கள் சார்பில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதில், நலத்திட்ட உதவிகள் அன்னதானம் சிறுவர்கள் சாகசம் என மேலம் தாளங்கள் முழுக வெகு விமர்சையாக விஜயின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

மேலும், சிறுவர்கள் சாகசம் செய்யும் பொழுது கையில் பெட்ரோல் ஊற்றி எரிய வைத்து ஓடுகள் உடைப்பது உள்ளிட்ட சாகசங்கள் செய்தனர். அப்பொழுது, சிறுவன் ஒருவர் கையில் பற்ற வைத்த தீ ஓடு உடைத்த பின் அணைக்க முடியாமல் அதிகளவு எறிய தொடங்கியது. இதனால், அலறிய சிறுவன் கையை உதறிய பொழுது அவர் அருகில் பெட்ரோல் வைத்திருந்தவர் மீதும் தீ பற்றி எறிந்தது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவர் கையிலும் பற்றிய தீயை அணைத்து சிறுவனை மீட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெட்ரோலை வாட்டர் கேனில் வாங்குவது சட்டவிரோதம் ஆகும். இந்த நிலையில், வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு இந்த சாகசத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இதுபோன்ற சாகசங்கள் நடத்துவதற்கு முடியாத அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் விஜய் ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிறுவன் கையில் தீ பற்றிய சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இது குறித்து பேசிய சிறுவனின் தாயார் என் மகனுக்கு சிறிய காயம் தான் ஏற்பட்டது. தற்போது, நன்றாக இருக்கிறான். இது போன்ற பல சாகசங்களை செய்துள்ளதாக கூறினார். மேலும், தனக்கு விஜய் மிகவும் பிடிக்கும். அதனால், தான் எனக்காக இந்த சாகசத்தை எனது மகன் செய்தார். தீ விபத்து கூட பெரிதாக பயம் கொடுக்கவில்லை. ஆனால், இந்த வீடியோ ட்ரெண்டானது தான் பயமாக இருந்தது.

நாங்களாகவே விரும்பி இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம். எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும், இவரை தொடர்ந்து பேசிய சிறுவன் கிருஷ்வா இதுவரை 15 உலக சாதனைகளை செய்துள்ளேன். இந்த முறை ஸ்பார்க் ஆகியதால் தான் தீ பற்றியது. சாகசங்கள் செய்யும்போது இதெல்லாம் சகஜம்தான். ஐ வில் கம் பேக் இதற்கு முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இப்படி சாகசங்கள் செய்வது வழக்கம். இன்னும் தொடர்ந்து பல சாகசங்களை செய்வேன் என்று தைரியமாக பேசியுள்ளார். இருப்பினும், சிறுவன் கையில் தீ விபத்து ஏற்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 127

0

0