முதல்முறையாக களத்தில் மக்களைச் சந்திக்கிறார் விஜய்.. ஆட்டம் காணுமா தமிழக அரசியல்?

Author: Hariharasudhan
18 January 2025, 9:56 am

ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சென்னை: போராட்டக் குழுவினரைச் சந்திக்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து, நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளார் புஸ்ஸி என்.ஆனந்த், நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில், ஜனவரி 19 அல்லது 20-ல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு, மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்வதற்கு, காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 20ஆம் தேதி, ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, விக்கிரவாண்டியில் நடந்த தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Vijay Plan To Meet Parandur Public meet

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரைச் சுற்றி 5 ஆயிரத்து 100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. எனவே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீஸ் கண்முன்னே இளைஞர் வெட்டிக்கொலை…? காவல்நிலையம் கண்ணாடி உடைப்பு!!!

அதேநேரம், சமீபத்தில் சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை, சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கினார் விஜய். இதற்கு, களத்திற்குச் செல்லாத விஜய் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், முதல் முறையாக களத்தில் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!