10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்.. கூலித் தொழிலாளியின் மகள்கள் அசத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2025, 3:59 pm

கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளியின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா , 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தலா 474 என ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

இந்த இரட்டையர்கள், ஒரே அளவிலான முயற்சி மற்றும் கல்வி உறுதிப்பாட்டின் மூலம் ஒரே மதிப்பெண்களை பெற்று உள்ளனர். தமிழில் 95 மற்றும் 96, ஆங்கிலத்தில் 97 மற்றும் 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89 மற்றும் 92, சமூக அறிவியலில் 95 மற்றும் 98 என சிறந்த மதிப்பெண்கள் பெற்று உள்ளார்கள்.

பின்னணியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்தும், பொருளாதார சவால்களை எதிர்கொண்டும், இருவரும் பெற்ற இந்த சாதனை, பல மாணவர்களுக்கு உற்சாகமும், உந்துதலுமான உதாரணமாக அமைந்து உள்ளது.

பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்கள் அனைவரும் இச்சகோதரிகளின் வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…