விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 450 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

3 July 2021, 10:11 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே விவசாய தோட்டத்தில் கோபால் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்து 450 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள காகத்தான்வலசு பகுதியைச் சேர்ந்த கோபால் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருப்பதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் காகத்தான்வலசில் உள்ள கோபாலின் தோட்டத்தில் சோதனையிட்டனர். அங்கு 450 லிட்டர் சாராய ஊறல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சாராய ஊறல்களை போலீசார் கீழே ஊற்றி அளித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சியதாக கோபால் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

Views: - 162

0

0