அரச மரத்திற்கு அடியில் கஞ்சா விற்பனை அமோகம் : போலீசாரை கண்டதும் ஓட்டம்பிடித்த இருவர் கைது… 1 கிலோ கஞ்சா பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 1:21 pm
Cannabis Supply Arrest -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து 1கிலோ 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அரச மரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர்.

இதனிடையே காவல்துறையினரை கண்டதும் ஓடத் தொடங்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தாமரைபாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் குணசேகர் என்பதும் அவர்கள் மறைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..

Views: - 425

0

0