செங்கல்பட்டு அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தல் : பெண் உட்பட இருவர் கைது!!
24 January 2021, 12:41 pmசெங்கல்பட்டு : அச்சரப்பாக்கம் சுங்க சாவடி அருகே சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் சுங்க சாவடி வழியாக அவ்வப்போது வெளிமாநில மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரகசிய புகார்கள் வந்ததை முன்னிட்டு அச்சரப்பாக்கம் அருகிலுள்ள டோல்பிலாசாவில் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் S.புயல் பாலச்சந்தர் தலைமையில் உதவி ஆய்வாளர் M.சத்தியராஜ் மற்றும் தலைமை காவலர்கள் N.முரளிராஜன், A.அசோக் பிரபாகரன், E.இளங்கோவன் ஆகியோர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சுங்க சாவடியை கடக்க முற்பட்டபோது தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது.
சுமார் 1லட்ச ரூபாய் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்த மத்திய புலனாய்வு பிரிவினர் செங்கல்பட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகுமார் ஆகியோரை கைது செய்து மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவில்
ஒப்படைத்தனர்.
0
0