ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 450 கிலோ கஞ்சா பறிமுதல் : இருவர் கைது…

Author: kavin kumar
9 January 2022, 6:19 pm
Quick Share

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 450 கிலோ கஞ்சாவை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சுங்கச்சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வாகனசோதனையில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டனர். அப்போது சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சரக்கு வாகனத்தில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோழவரம் செங்குன்றம் போலீசாரின் தீவிர சோதனைகளையும் மீறி கடத்தி செல்லமுயன்ற சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 240

0

0