கோவையில் ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகள் கடத்தல்.! பக்கத்து வீட்டுப் பெண்ணை தேடும் போலீஸ்!!

20 November 2020, 12:04 pm
Child Kidnap - Updatenews360
Quick Share

கோவை : ஒரே தெருவை சேர்ந்த இரண்டு குழந்தைகளை பக்கத்து வீட்டு பெண் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த கோவைபுதூரில் உள்ள மலை நகரை சேர்ந்தவர் மைதீன் இவரது மகள் சர்மிளா ( வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் சியாம் (வயது 14 )அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலையில் வீட்டில் இருந்த இவர்கள் இருவரையும் திடீரென்று காணவில்லை. விசாரணையில் இருவரையும் அதே பகுதியில் வசித்துவரும் செந்தில் என்பவரின் மனைவி பவித்ரா (வயது 35) என்பவருடன் சென்றதாக தெரியவந்தது. இதுகுறித்து இருவரது பெற்றோர்களும் பேரூர் போலீசில் செய்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், பவித்ராவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததும்,, இதனால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஊட்டி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த குழந்தைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 0

0

0