இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்து : 4 பயணிகள் காயம்

Author: kavin kumar
10 January 2022, 4:30 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையின் குறுக்கே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியதால் ஒரு பேருந்து மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நேக்கியும், மதகடிப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி நேக்கியும் இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதகடிப்பட்டு பகுதியில் இருந்து வந்த தனியார் பேருந்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்திரா காந்தி சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்தது.

அப்போது பின்னால் விழுப்புரம் பகுதியில் இருந்த வந்த பேருந்து சிக்னலில் நிறுத்த முயன்றனர். அப்போது சாலையின் குறுக்கோ திடீரன சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் சாலையின் தடுப்பு கட்டை மீது ஏறி முன்னாள் நின்று கொண்டிருந்த போருந்து மீது மோதியது. இதில் 4 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து விபத்து சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 246

0

0