இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டிகள் : பதைபதைக்க வைத்த விபத்தின் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 6:38 pm
Dgl Accident -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே குட்டூர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன்,மனைவி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் உடையநாதபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது மனைவி மணிமேகலையுடன் உலுப்பகுடியில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது குட்டூர் பேருந்து நிலையம் எதிரே திம்மநல்லூர் பள்ளப்பட்டி சேர்ந்த சின்னையா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது தவறான பாதையில் வந்த சின்னையா, நாகராஜன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் போலீசார் காயமடைந்த 3 பேரையும் நத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்விபத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியபோது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Views: - 266

1

0