இரு இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து : குலை நடுங்க வைத்த காட்சி!!

13 January 2021, 11:51 am
Bike Accident - Updatenews360
Quick Share

சிவகங்கை : காரைக்குடி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தின் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

சத்யா நகரில் வசிக்கும் காரைக்குடி சந்தைகளில் சோளகருது விற்பனை செய்யும் காசி (வயது 60) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது எதிரில் வந்த தினேஷ்குமார் (வயது 28) என்ற வாலிபர் நேருக்கு நேர் மோதினார்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காசி பலியானார்,காசியின் உடலை கைப்பற்றிய வடக்கு காவல்துறையினர் உடற்கூறு ஆய்வு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0