அந்தரத்தில் தொங்கிய இருசக்கர வாகனம், சிலிண்டர் : விலைவாசி உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 6:56 pm
DMDK Protest - Updatenews360
Quick Share

கோவை : பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கோவையில் தே.மு.தி.க.,வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தே.மு.தி.க.,வினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இருசக்கர வாகனம் ஒன்றுக்கும், மளிகை பொருளுக்கும் தூக்குக் கயிறு மாட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தே.மு.தி.க துணைப் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Views: - 223

0

0