இரண்டு பேருந்துகளுக்கிடையே சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் : கைக்குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 5:46 pm
Family Escape from Accident -Updatenews360
Quick Share

புதுச்சேரி : இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கைக்குழந்தையுடன் நூலிழையில் உயிர்தப்பிய தம்பதிகள் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி அருகே கல்மண்டபம் கிராமத்தில் புதுச்சேரி நோக்கி சென்ற பேருந்தை இருசக்கர வாகனத்தில், கைக்குழந்தையுடன் வந்த தம்பதிகள் முந்தி செல்ல முயன்ற போது, எதிர் திசையில் மற்றொரு பேருந்து வந்துள்ளது.

இதனால் இரண்டு பேருந்துகளுக்கும் இடையே தம்பதிகள் சென்ற இருசக்கர வாகனம் சிக்கி கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், செய்வதறியாது திகைத்துப்போன தம்பதிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனம் மட்டுமே சேதமானது. தம்பதிகள் இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது.

Views: - 507

1

0