பவானி ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி : உறவினர் வீட்டிற்கு வந்த போது சோகம்!!

7 February 2021, 8:48 pm
Bhavani River Dead - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புன்செய் புளியம்பட்டியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் படித்த 5 இளைஞர்கள் தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த உறவினர் தனுசுராஜ் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது பவானிசாகர் சென்று பவானி ஆற்றில் குளித்து விட்டு வரலாம் என கல்லுக்கொத்து பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாலமணிகண்டன், புவனேஷ் மற்றும் ஶ்ரீதர் ஆகிய மூவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட அப்பகுதியில் உள்ள மீனவர்கள் ஶ்ரீதரை காப்பாற்றி கரையில் சேர்த்துள்ளனர். மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கியதால் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்த சத்தியமங்கலம் தீ அணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரமாக போராடி தண்ணீரில் மூழ்கிய பாலமணிகண்டன் மற்றும் புவனேஷ் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். உறவினர் வீட்டுக்கு வந்த இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0