உதயநிதிக்கு என்னை பார்த்து பயம்.. புதிய வழக்கு போட முயற்சி : ஷாக் கொடுக்கும் சவுக்கு சங்கர்!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 2:26 pm
Savuku
Quick Share

தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது களியக்காவிளை காவல்நிலைய பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்

குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமின் வழங்கபட்டு உள்ளதை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வதாடியதை தொடர்ந்து நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் பல்வேறு நிபந்தனைகளுடன் சொந்த ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து போலீசார் சவுக்கு சங்கரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் செல்லும் போதும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த போதும் செய்தியாளர்களை பார்த்ததும் அடுத்த அடுத்த வழக்குகளில்
மீண்டும் மீண்டும் என்னை கைது செய்ய முயர்ச்சி நடக்கிறது திமுக அரசு என்னை பார்த்து அஞ்சுகிறது உதயநிதி என்னை கண்டு அஞ்சுகிறார். இதன் காரணமாக தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கிளை சிறையில் இருந்து குழித்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதுகுறித்து யூ டியூப்பர் சவுக்குசங்கரின் வழக்கறிஞர் டேவிட் கூறியதாவது, பல மாவட்டங்களில் 17 வழக்குகள் பதிவு செய்ய பட்டு இருக்கிறது. அதிகமான வழக்குகளில் ஜமீன் கிடைத்து விட்டது சில வழக்குகளில் நீதிமன்றம் ரிமாண் செய்யாமல் சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

ஏனென்றால் உச்சநீதிமன்றம் சில வழிககாட்டுதல்களை கூறி உள்ளது ஒரே காரணத்துக்காக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்வது நிலைக்கதக்கதல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நீதிபதி அவர்களிடம் எடுத்து காட்டினோம். இதை ஏற்று கொண்ட நீதிபதி சவுக்கு சங்கர் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார் என்று தெரிவித்தார்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 377

    0

    0