உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் வெளியாகியுள்ள திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள கலகத் தலைவன் திரைப்படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஸ்டாலினின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி தனது குடும்பத்துடன் பார்ப்பதற்காக வந்திருந்தார்.
முன்னதாக திரையரங்க வாயிலில் அவரை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்களும் கட்சியினரும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து படத்தை பார்ப்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தக்ஷிணாமூர்த்தி, எனது மருமகன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகன் நடித்த இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.
நான் அவரது தாத்தா கலைஞர் நடிக வேல் எம்.ஆர் ராதாவிற்கு ஈடு கொடுத்து நடித்த பல நாடகங்களை பார்த்திருக்கிறேன். அவர் எடுத்த படங்களை அவருடன் அமர்ந்து பார்த்திருக்கிறேன். தற்போது அவர் பேரன் நடித்த படத்தையும் பார்க்க வந்திருக்கிறேன் என்று கூறினார்.
மேலும் அவருக்கு இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் இருப்பினும் உங்கள் மூலமாகவும் முதலமைச்சரையும் நான் அவருக்கு அமைச்சர் பதவியயும் தந்து சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த படம் 100 நாட்கள் ஓட வேண்டும் 100 நாள் விழாவில் நான் கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன். இந்த 99 வயதில் அவர் படத்தை பார்க்க வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
கடந்த நவம்பர் 14 ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தாய் மாமா தட்சிணாமூர்த்தியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்து ஆசி வாங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.