ஆட்சிக்கு வராமலேயே அதிகாரத்தை கையில் எடுக்கும் உதயநிதி : போலீசாரின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல்!!
23 November 2020, 7:12 pmதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழகத்தல் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அதிமுக, திமுக கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன.
கொரோனா காலம் என்றாலும் திமுகவினர் பிரச்சார பணிகளில் இறங்கியுள்ளனர். இதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நவம்பர் 20ம் தேதி திருக்குவளையில் தொடங்கினார்.
முதல் நாளில் இருந்து கைதாகி விடுதலையான உதயநிதி தொடர்ந்து பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். மயிலாடுதுறையில் நேற்று அனுமதி பெறாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக போலீசார் கைது செய்தனர்.
நேற்று கைதான உதயநிதி ஸ்டாலின் கிட்டதட்ட 7 மணி நேரம் கழித்தே விடுதலையானார். இதையடுத்து கைதுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கைதுக்காக போலீசாரிடம் காரணம் கேட்டேன், அதற்கு அவர்கள் நான் எங்கு சென்றாலும் கூட்டம் கூடுகிறது என்றனர். இதனால் தன்னை கைது செய்ததாக கூறினார். இதற்கு மேல் நீங்கள் போக முடியாது என கூறினேன். சரி என்று கூட்டத்தினரை சமாதானம் செய்து வன்முறை வேண்டாம் என கருதி கைது செய்யுமாறு கூறினேன்.
இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் பழனிசாமி தான். அவர் தூண்டிவிட இதையெல்லாம் செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ். அவர் பெயரை நாங்கள் மறக்கமாட்டோம், இன்னும் அஞ்சு மாசம்தான் இருக்கு, நாங்கள் பார்க்காத காவல்துறையா? என நேரடியாகவே காவலர் பெயரை கூறி மிரட்டும் தோனியில் பேசினார்.
இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சு அஞ்சு மாசம்னு சொல்லி ஆட்சிக்கு வராத திமுக, அதிகாரத்தை கையில் எடுத்தது போல் மிரட்டுகிறது. திமுகவுக்கு மிரட்டுவது புதிதல்ல என்றாலும் வரைமுறையை மீறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத காவல் அதிகாரி குமுறியுள்ளார்.
ஆட்சிக்கு வராமலேயே சட்டம் ஒழுங்கை காக்கும் காவல் அதிகாரியை மிரட்டுகின்றனர். ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் நிலைமை என் ஆகும் என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
0
0