வன்னியர் வாக்குகளை கவர கொள்கையை மறந்த திமுக : பங்காரு அடிகளாரிடம் ஐக்கியமான உதயநிதி!!

5 February 2021, 8:10 pm
Bangaru Udhayanithi - Updatenews360
Quick Share

தேர்தல் வந்தாலும் வந்துச்சு, சில கட்சிகள் தங்களது கொள்கையை மறந்துவிட்டு நாடகத்தை நடத்தி வருகின்றனர். சில கட்சினு சொல்றத விட்ட ஸ்ட்ரைட்டா திமுகனே சொல்லிரலாம்.

அண்மைக்காலமாக திமுக சிக்காத பிரச்சனைகளே இல்ல, பிரியாணில இருந்து எல்லா பிரச்சனைகளுமே திமுக விட்டு பிரியாமதா இருக்கு. என்ன செஞ்சாலும் ஏதாவது பிரச்சனைகளில் சிக்குவது திமுகவின் வாடிக்கையாகவே மாறிவிட்டது.

ஆனால் தேர்தல் வந்ததும் தங்களோட கொள்கையை மறந்து திமுக போடும் ஆட்டம் சகிக்கல. சாமி இல்ல, பக்தி இல்லனு சொன்ன கூட்டம் இப்போது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடம் பங்காரு அடிகளார சந்தித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக திமுகவின் ஆணிவேரான பெரியாரை மறந்து திமுகவின் செயல்பாடுகள் உள்ளது எனறே சொல்லலாம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் பங்காருது அடிகளாரை திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இதை உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சார பயணத்தின் இடைவெளியில் ஆதிபராசக்தி கல் மருத்துவம் பண்பாட்டு அறநிலைய தலைவர் பங்காரு அடிகளாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக பதிவிட்டுள்ளார்.

இந்துக்கள் ஓட்டுக்களை வாங்க தேர்தல் நேரத்தில் பெரியாரை மறந்து, கொள்கையை மறந்து திமுகவினர் நாடகமாடுவது மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திமுகவினர் காவி வேஷ்டி அணிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பாஜகவினர் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கையில் வேலை எடுத்தார் ஸ்டாலின். மகனோ மரியாதை நிமித்தம் என்ற பெயரில் ஆதினங்களை சந்தித்து வருகிறார். நீங்க எப்ப மரியாதை கொடுப்பீங்க, எப்ப கொடுக்க மாட்டீங்க எல்லாம் மக்கள் பார்த்துக்கிட்டு தான இருக்காங்க என நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0