அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்!!

26 August 2020, 12:20 pm
amaravathy Dam - Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு. கல்லாபுரம் மற்றும் ராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என கல்லாபுரம் மற்றும் ராமகுளம் பழைய வாய்க்கால் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் இன்று முதல் 2834 ஏக்கர் பாசன நிலம் வசதி பெறும் வகையில் 120 நாட்களுக்கு 324 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையின் நீர்மட்டம் தற்போது 84அடியாகவும் அணையின் நீர்வரத்து 535கன அடியாகவும் உள்ளது.

விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது..

Views: - 35

0

0