மது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்!!

15 June 2021, 5:11 pm
Tasmac Umbrella- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் குடையுடன் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்க காத்திருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு மதுப் பிரியர்கள் வருகை அதிகரித்துள்ளது.

மதுப் பிரியர்கள் கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது மதுகடையில் மதுபாட்டில்கள் இருப்பு இல்லாத நிலையில் மதுபிரியர்களை வரிசையில் காக்க வைத்துள்ளனர்.

குடையுன் வந்துள்ள நபர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 223

0

0