கோவையில் அனுமதியின்றி நடைபெறும் ஜெபக் கூட்டங்கள் : இந்து முன்னணியினர் புகார்!!

Author: Udayachandran
15 October 2020, 2:01 pm
hindu Munnani complaint- Updatenews360
Quick Share

கோவை : ரத்தினபுரி பகுதியில் அனுமதியின்றி ஜெபக் கூட்டங்கள் நடத்துவதாக இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் இன்று ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

ரத்தினபுரி பகுதியில் பி.எம். சாமி காலனி, கணேஷ் நகர், மற்றும் ரத்தினபுரி காவல் நிலையம் அருகிலும் அனுமதி இல்லாத ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அரசாங்கத்தின் விதிகளை மீறி சட்டவிரோத ஜெபக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்துக்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் நோக்கோடு ஜெபக் கூட்டத்திற்கு இந்துக்களை அழைக்கின்றனர். ஆகையால் இந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Views: - 38

0

0