8 வயது மகள் கண் முன்னே தாய் படுகொலை : அக்காவை கொன்று எரித்த தம்பிக்கு ஆயுள் தண்டனை..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 8:55 pm
Life Time Senetence- Updatenews360
Quick Share

கோவை : மகள் கண் முன்னே தாயை கொடூரமாக கொலை செய்த சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் சங்கீதா. கணவரை பிரிந்து தாய் வீட்டில் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்தார். வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கீதா மீது ஏற்கனவே அவரது தம்பி சரவணகுமார் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கணவரை பிரிந்து தனது வீட்டில் வந்து வாழ்ந்து வந்தது சரவணனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதற்கிடையே, சரவணகுமாரை அவரது தாய் அடிக்கடி திட்டி வந்ததற்கு, அவரது அக்கா சங்கீதா தான் காரணம் என சரவணகுமார் எண்ணியுள்ளார்.

தனக்கும் தன் தாயுக்கும் பிரச்சினை ஏற்படுவதுடன், தனக்கு இடையூறாக உள்ளதாக எண்ணி சங்கீதா மீது சரவணகுமார் கோவமாக இருந்த வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டில் 8 வயது மகளுடன் இருந்த சங்கீதாவை வீட்டை விட்டு வெளியேறும் படி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி சங்கீதாவை சரவணகுமார் அவரது 8 வயது மகள் கண் முன்னே கத்தியால் சரமாரி தாக்கி கொலை செய்தார். கொலையை மறைக்க சங்கீதாவை அவரின் மகளின் கண் முன்னே அவருடைய தம்பி துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் போட்டு மறைவான இடத்திற்கு எடுத்து சென்று எரித்தார்.

எரிந்த நிலையில் சடலமாக சங்கீதா உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கணினி தொழில்நுட்பத்தில் பணியாற்றி வந்த சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Views: - 558

0

0