தமிழகத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்றும் திராவிட மாடல் என கூறி ஆன்மீகம் மண்னை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆழ்கடல் மீன்பிடியை உக்குவிக்கும் வகையில் படகு வாங்கும் மீனவர்களுக்கு 60% மானியம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் கடல் பாசி எடுக்க 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இதேபோல் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தை ரூ.15.65 கோடி நிதி ஒதுக்கி நவீனபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியை முனேற்ற பாதையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், திராவிட மாடல் என சொல்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்றும் திராவிட மாடல் என கூறி ஆன்மீகம் மண்னை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் என்றும் திராவிட மாடல் என கூறிக்கொண்டு கொடுத்த வாக்குறிதியை மறைக்க பார்க்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஆட்சியாளர்களுக்கு தகுந்தார் போல ஆளுநர் செயல்பட முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
This website uses cookies.