தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய அமைச்சர் : பா.ஜ.க பொருளாளர் எஸ்ஆர் சேகர் தகவல்..

19 November 2020, 1:11 pm
SR Sekar - Updatenews360
Quick Share

கோவை : வேல் யாத்திரையை முன்னிட்டு பாஜக சார்பில் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க வேல் யாத்திரையை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் எழுச்சி பொதுக்கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக மேடை அமைக்கும் இடத்தை பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் இன்று பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருகின்ற 22ம் தேதி வெற்றிவேல் யாத்திரையின் ஒரு பகுதியாக எழுச்சி பொதுக்கூட்டமும், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர் சதனந்தகவுடா இதில் கலந்து கொள்ள இருக்கிறார்.

sadananda gowda: Latest News, Videos and sadananda gowda Photos | Times of  India

சிவானந்தா காலனி பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக காவல் துறையிடம் அனுமதிகோரியுள்ளோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. வெற்றிவேல் யாத்திரை தடை இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையால் அரசு அரண்டு போய் உள்ளது.” என்றார்.

Views: - 28

0

0