திருமண வரன்களை தடுக்கும் முதியவர்… பாதிக்கப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம்‘.. வைரலாகும் போஸ்டர்..!!

8 July 2021, 2:11 pm
Marriage Poster - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கருங்கல் அருகே திருமணம் பார்க்க வரும் வரன்களை தடுத்து தவறான தகவல் பரப்பி வரும் கும்பல் ஒன்று “வருகின்ற திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக நன்றி என முதியவரின் போட்டோவுடன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வரன் பார்ப்பதும் வரன் சம்பந்தமாக அவர்களின் சொந்த ஊரில் விசாரிக்க செல்லும் போது டீக்கடை பெஞ்ச் ஆசாமிகள் இல்லாதது பொல்லாது புறம் பேசி வரன்களை தடுப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர் சங்கம் என்றும் மொட்டையாக பேனர் வைப்பதும் போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்த நிலையில் புது டிரெண்டிங்காக தற்போது கருங்கல் அருகே அயினி விளை, பிச்சன் விளை, இளைஞர்கள் ஒருபடி மேலே சென்று அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் பெஞ்சமின் என்பவர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உக்கார்ந்திருக்கும் போட்டோவை போஸ்டரில் போட்டு திருமணம் விலக்குவோர் சங்க தலைவர் என்றும் தொழில் திருமண வரன் தடுத்தல் என்றும் உப தொழில் பலசரக்கு வியாபாரம் என்றும் சுய விபர குறிப்போடு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே “வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்” என்று அயினி விளை, பிச்சன்விளை, பகுதி மட்டுமில்லாமல் குளச்சல், கருங்கல் பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர் பரபரப்பு ஏறப்ட்டது.

இதனால் போஸ்டர் குறித்த செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவியது. இதுகுறித்து இந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக வரன்கள் தேடும் பொழுது மணமகன் மற்றும் மணமகள் இடங்களில் உள்ள சிலர் வரன் கேட்டு விசாரணைக்கு வருபர்களிடம் மணமகன் குடிப்பவன் என்றும் சரியான வேலை இல்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி வரங்களை தடுப்பதுடன் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் நடத்தை சரியில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி பல்வேறு திருமண வரன்களை தடுத்து வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இதுபோன்ற போஸ்டர் மற்றும் பிளக்சுகளை வைத்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 352

0

0