ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்..!

4 August 2020, 2:18 pm
UPSC-headquarters - updatenews360
Quick Share

டெல்லி : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழக அளவில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களை, சம்பந்தப்பட்ட துறைகளில் பணியமர்த்துகின்றனர்.
அந்த வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 829 உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்., மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், தமிழக அளவிலான சிவில் சர்வீசஸ் தேர்வில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பெற்றார். இவர் தேசிய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு,
மதிப்பெண் அடிப்படையில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

Views: - 27

0

0