நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : ஜி.சி.டி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Author: kavin kumar
19 February 2022, 8:40 pm
Quick Share

கோவை: வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து ஜி.சி.டி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள 1290 வாக்கு மையங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வந்தனர்.மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவற்ற நிலையில் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் பந்தய சாலையில் அமைந்துள்ள நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்களுக்கு அரசு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதனையடுத்து கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு வாக்கு எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. சிசிடிவி அடங்கிய அறையில் வைக்கப்பட்டு வரும் 22ஆம் தேதி வாக்கு என்னும் பணி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 210

0

0