ரவுடிகளை ஒடுக்கி பிரபலமான ஆய்வாளர் இசக்கி ராஜா பழனிக்கு பணியிட மாற்றம் : இளைஞர்கள் சூழ்ந்து செல்பி எடுத்து உற்சாக வரவேற்பு!!

22 October 2020, 7:47 pm
Youth Welcomes Inspector - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நெல்லையில் ரவுடிகளை அட்டகாசத்தை அடக்கிய சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை கண்ட ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

நெல்லையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிக அளவில் இருந்தது. இதை அடக்கி ஒடுக்கி ரவுடிகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா ரவுடிசம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஆடியோ ஒன்று வெளியானது.

இதில் இருந்து சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா பிரபலமானார். தற்போது நெல்லையிலிருந்து பணியிட மாறுதல் பெற்று பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளராக இசக்கி ராஜா பொறுப்பேற்றுள்ளார். பாலசமுத்திரத்தில் திமுக சார்பில் கூட்டம் நடைபெற்றது.

Views: - 33

0

0