உலகம் சுற்றும் வாலிபன் என கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உலகம் சுற்றும் முதியவர் என்றால் நம்ம முடிகிறதா? இதோ 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கரின் சுவாராஸ்சியமான செய்தி தொகுப்பு….
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (61). இவர், 1962 ஆம் ஆண்டு பிறந்தார். திருமணம் ஆகாத இவர், தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில்பெரிய அளவில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் சமையல் செய்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இவர் உலகம் முழுதும் சுற்றி பார்க்க வேண்டும் என மனதில் ஆவல் தோன்றியுள்ளது.1991-ல் இருந்து தற்போது வரை 120 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். இந்தியா வழியாக 2014, 2015, 2018 தற்போது 2023ல் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு முதல் இந்த முறை சைக்கிள் ஓட்டி உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியுள்ளார். நான் பயணிக்கும் பைக் ஒரு Recombinant பைக், Chez Republic பைக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட AZUB. 2013ல் இருந்து 40000 கிமீக்கு மேல் இந்த சைக்கிளில் பயணித்துள்ளார்.
தினசரி சராசரியாக ஒரு நாளைக்கு 80 முதல் 125 கிமீ செல்கிறார். போகும் இடங்களில் ஹோட்டல்களில் தங்கி செல்வதாகவும், நாட்டைப் பொறுத்து பல நேரங்களில் சொந்த உணவை சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே கடந்து சென்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதேபோன்று சாலையில் செல்லும் பொழுது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
உலகம் சுற்றும் வாலிபன் என கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், 61 வயதில் உலகத்தை சுற்றி வரும் இந்த அமெரிக்கர் பற்றி தற்போது தான் கேள்விபடுகிறோம். இவரது பயணம் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.