நடிகர் ரஜினியின் அமெரிக்க பரிசோதனை நிறைவு : நாளை சென்னை திரும்புகிறார் ‘அண்ணாத்த‘!!

7 July 2021, 1:12 pm
Rajini Return- Updatenews360
Quick Share

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் பரிசோதனை நிறைவடைந்ததால் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அவர் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்.

அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாளை அதிகாலை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

தற்போது ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணியும் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகிய முக்கிய நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 117

0

0