உத்திரமேரூர், சாலவாக்கம் பெருநகர் காவல் நிலையங்கள் இணைப்பு : தமிழக அரசு அரசாணை!!

6 February 2021, 2:41 pm
Kanchi Police Stations - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : உத்திரமேரூர், சாலவாக்கம் , பெருநகர் காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் உட்கோட்டதுடன் இணைக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், 2019ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. வருவாய் கிராம அடிப்படையில், மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டன. ஆனால், காவல் துறைக்கான எல்லைகள், முறையாக வரையறுக்கப்படாமல் இருந்தன.

உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள பெருநகர், உத்திரமேரூர், சாலவாக்கம் ஆகிய காவல் நிலையங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்தாலும், செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டில் இருந்தன.வருவாய் துறை, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், காவல் துறை செங்கல்பட்டு மாவட்டத்திலும் இருந்ததால், சட்டம் – ஒழுங்கு விவகாரத்திலும், நிர்வாக ரீதியிலும், குழப்பம் இருந்து வந்தது.

இவற்றை சரிசெய்ய, பெருநகர், உத்திரமேரூர், சாலவாக்கம் என, மூன்று காவல் நிலையங்களையும், காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைக்க, காஞ்சிபுரம் காவல் துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்கள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.ஓராண்டுக்கு பின், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கான காவல் எல்லைகளை, துல்லியமாக பிரித்து, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள் அனைத்தும், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே வருவதால், அதில் எந்த குழப்பமும் இல்லை.உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில், 10 வருவாய் கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இருந்தன. அவை, மதுராந்தகம் காவல் எல்லையில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இதேபோல், சாலவாக்கம் காவல் எல்லையில் இருந்த, 15 வருவாய் கிராமங்கள், படாளம் எல்லையில் சேர்க்கப்பட்டுள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலுார் காவல் எல்லையில் உள்ள எட்டு வருவாய் கிராமங்கள், சாலவாக்கம் எல்லைக்குள் இணைக்கப்பட்டு உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது, 18 காவல் நிலையங்களும், செங்கல்பட்டில், 33 காவல் நிலையங்களும் இயங்குகின்றன.

Views: - 1

0

0