கோவையில் தடுப்பூசி முகாமில் தகராறு : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஊழியர்களுடன் வாக்குவாதம்!!

17 July 2021, 4:12 pm
Vaccine Center Issue- Updatenews360
Quick Share

கோவை : குறிச்சி ஆரம்பப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே ஏராளமானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக குறிச்சி ஆரம்ப பள்ளிக்கு வந்தனர். தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது.

அப்போது டோக்கன் பெறுவதில் அவர்களுக்கு இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அங்கிருந்த ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. டோக்கன் கொடுத்த ஊழியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்படும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் குறிச்சியில் தடுப்பூசி போடும் மையத்தின் அருகே பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Views: - 96

0

0