தமிழகத்தில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி : அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 2:46 pm
சென்னை : நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டிருப்பதாகவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் சென்னை ராஜீவ்காந்தி ஓமந்தூரார் ஸ்டான்லி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0
0