மதுரையில் தடுப்பூசி போடும் பணி விறு விறு : ஒரே நாளில் 14 ஆயிரம் பேருக்கு செலுத்த திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 12:47 pm
Vaccine Crowd - Updatenews360
Quick Share

மதுரை : இன்று ஒரே நாளில் 107 தடுப்பூசி மையங்கள். 19 சிறப்பு முகாம்கள் மூலம் 14,420 பேருக்கு தடுப்பூசி செலுத்தபடுகிறது.

மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை 5,14,391 பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவியதன் காரணமாக கடந்த சில தினங்களாக 50க்கும் குறைவான மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 14,420 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது,

இதற்கென இன்று 19 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 88 நிரந்தர மையங்கள் உள்ளிட்ட 107 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மையங்களிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 17,490 டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 279

0

0