“மதுரைக்கு வந்த வைகை“ : ஆர்பரித்து வந்த நீர்.. வாகன ஓட்டிகள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2021, 3:41 pm
Madurai Vaigai - Updatenews360
Quick Share

மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மதுரை நகர் பகுதிக்கு வந்தடைந்தது

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக நெல் பாசனத்திற்கு கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் வினாடிக்கு 900 கன அடி நீர் வாய்க்கால் மூலம் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதாலும், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து நேற்றைய தினம் முதல் 5 நாட்களுக்கு மொத்தம் 1000 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி வைகை அணையில் இருந்து மதகுகள் வழியாக வைகை ஆற்றில் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இந்த தண்ணீரானது வெள்ளம்போல் ஆர்ப்பரித்து மதுரை மாநகர் பகுதியில் யானைக்கல் தரைப்பலாம் வந்தடைந்தது.

தரைப்பாலத்தில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்லாமல் இருப்பதற்கு தடுப்பு வேலிகள் வைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 372

0

0