படையப்பா போல் எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா : டிவிட்டரில் ரஜினி குறித்து வைரமுத்து உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2021, 11:23 am
Rajini Vairamuthu- Updatenews360
Quick Share

உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்களும் தற்பொழுது ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப விரும்புவதாக உணர்வுபூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினி அவர்களின் நலன் குறித்து கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கை தகவல் கேட்டு நிம்மதியை மீட்டெடுத்தேன். உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா, படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா, வாழ்த்துகிறேன் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 239

0

0