”அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!”: நடிகர் விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை..!!

17 April 2021, 10:06 am
vivek rip - updatenews360
Quick Share

சென்னை: நடிகர் விவேக்கின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார், அதில்,

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து. திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.

கலைச் சரித்திரம் சொல்லும் நீ ‘காமெடி’க் கதாநாயகன் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் வைரமுத்து. விவேக் மறைவுக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Views: - 71

0

0