வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாலாங்குளம் : கோவை விழாவில் மக்களை கவர்ந்த ‘லேசர் லைட் டான்ஸ்’..!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 11:16 pm
Cbe Valangulam - Updatenews360
Quick Share

கோவை : கோவை விழா கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு வாளாங்குலத்தின் கரை பகுதியில் ‘லேசர் லைட் டான்ஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை விழாவையொட்டி உக்கடம் வாலங்குளம் கரையில் லேசர் விளக்கு கண்காண்சியை மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

குளத்தில் உள்ள நீரை பல அடி தூரம் பீச்சி அடித்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வண்ண நிறங்களிலான லேசர் விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.

இதில் தேசியபற்று பாடல்கள், திரைப்பட பாடல்கள் என பாடலுக்கு ஏற்றவாறு லேசர் விளக்குகள் அசைவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து செந்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில் ஒரு வார காலம் மிக சிறப்பாக நடைபெறுகின்ற இந்த கோவை விழா நிகழ்வில் லேசர் ஷோ மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

கோவையின் ஒரு பரிணாம வளர்ச்சியாக ஒட்டுமொத்தமாக கோவை மக்களுடைய ஒரு திருவிழாவாக இந்த கோவை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்த கோவை விழா, நோய் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமாக கோவை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், கல்வி , தொழில், மோட்டார் உற்பத்தி, அழகு தமிழ் பேசுகின்ற இந்த கோவையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த கோவை மக்களின் திருவிழா.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்ட ஒட்டுமொத்தமான அனைத்து அமைப்புகளும் நன்றி. இந்த விழா இன்னும் சிறப்படைய அரசு நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகர காவல் ஆணையர் கோவை மேயர் துணை மேயர் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Views: - 711

0

0