பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப்படம் – சிக்கிய வேன் உதவியாளர்

19 November 2020, 9:14 pm
Quick Share

செங்கல்பட்டு: பள்ளி மாணவியின் செல்பேசிக்கு ஆபாசப்படங்களை அனுப்பி சாட்டிங் செய்ய வலியுறுத்திய பிரபல மெட்ரிக் பள்ளியின் வேன் உதவியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பிரபல ஆங்கில மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். வெடால் கிராமத்தை சேர்ந்த விவசாயின் 13 வயது மகள் இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் வேன் ஓட்டுனருக்கு உதவியாளராக பணிபுரியும் செய்யூர் பகுதியை சேர்ந்த சூசை சத்யராஜ் என்பவர் தான் வைத்துள்ள செல்பேசி மூலம் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாண ஆபாச படங்கள் அனுப்பி சாட்டிங் செய்ய வலியுறுத்தி தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் விவசாயின் மகளுக்கு வாங்கித் தந்துள்ள செல்பேசியில் ஆபாச படங்கள் வந்துள்ளது. இதை கண்ட மாணவியும் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சி உற்றனர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட செய்யூர் காவல் ஆய்வாளர் சின்னதுரை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டார். அதில் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச படங்களை அனுப்பி சாட்டிங் செய்ய வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியர் கூறியதாக பொய்யான தகவலை கூறி,

இந்த பள்ளியில் வேன் ஓட்டுனருக்கு உதவியாளராக செயல்பட்டு வந்த சூசை சத்யராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூசை சத்யராஜ்யின் செல்போனை கைப்பற்றி அதிலுள்ள ஆபாசப்படங்களை கண்ட காவல் ஆய்வாளர் சின்னதுரை அதிர்ச்சியுற்றார். பள்ளியில் படிக்கும் மாணவிகள் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என சகட்டுமேனிக்கு சூசை சத்யராஜ் ஆபாச படங்களை அனுப்பி உள்ளது தெரியவந்தது. இதன் பேரில் சூசை சத்தியராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு செல்பேசியில் ஆபாச படங்களை அனுப்பிய சூசை சத்யராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 0

0

0