வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு.. செங்கத்தில் பாமகவினர் சாலை மறியல்… ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Author: Babu Lakshmanan
31 March 2022, 7:47 pm
Quick Share

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆட்சியின் போது வன்னிய சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்தத நீதிமன்றம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வன்னியர்கள் சமூகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாமகவினர் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பாமகவினர் தமிழக அரசு மற்றும் உச்சநீதிமன்றதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியும் சாலைமறியலில் ஈடுபட்டதால் திருவண்ணாமலை பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 357

1

0