ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய விஏஓ சங்கம் : ரூ.75 லட்சம் நிதியை அமைச்சர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்!!

17 May 2021, 3:46 pm
VAO Corona Fund - Updatenews360
Quick Share

விருதுநகர் : ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் கொரோனோ பொது நிவாரண நிதிக்கு வழங்க தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்து ரூ.79 லட்சம் நிதியை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருப்பம் உள்ளவர்கள் கொரோனோ நிவாரண உதவியை வழங்கலாம் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கொரோனோ நிவாரணதிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

28 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதிய தொகையான 79 லட்சம் ரூபாய் நிதியை வருவாய்துறை மூலம் நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப வலியுறுத்தி தீர்மானத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வழங்கினர்.

Views: - 121

0

0