5 வருடமாக காதலித்துவிட்டு பெண்ணை கழட்டி விட்ட விஏஓ : காதலிக்கு திருமணமாவதை தடுக்க இழிவான செயல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 12:59 pm
VAO Arrest - Updatenews360
Quick Share

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.

2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) என்ற பெண்ண சந்தித்து நட்பு பாராட்டினார்.

நாளடைவில் நட்பு காதலாக மாறியது .ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் சிவரஞ்சனி தன்னை திருமணம் செய்து கொள்ள ராஜேஷை வலியுறுத்தினார்.

ராஜேஷ் பிடிவாதமாக சிவரஞ்சினியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் ஜாதக பொருத்தம் நமக்குள் சரியில்லை, எனவே இந்த திருமணம் நடைபெறாது என கூறி தப்பிக்க முயற்சித்தார்.

இதனைக் கண்ட சிவரஞ்சனி வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று ராஜேஷை கட்டிப்பிடித்து ஓ வென அழுதுள்ளார். அழுததை ராஜேஷ் மறைமுகமாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார்.

இதை அறியாத சிவரஞ்சனி சகஜ நிலைக்கு மாறி, சிவரஞ்சனி தனது வீட்டார் ஏற்பாடு செய்த , திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த, ஜானகிராமன் என்பவரை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது

இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் , ஜானகிராமனின் செல்பேசி எண்ணை பெற்று சிவரஞ்சனி தன்னை கட்டிப்பிடித்து அழுத புகைப்படத்தையும் இந்த பெண் என்னை காதலித்தார். ஆதலால் இந்த பெண் சரியில்லை என வாய்ஸ் மெசேஜும் அனுப்பி வைத்தார்.

இதை கண்ட ஜானகிராமன் தனது உறவினர்கள் 20 பேரை அழைத்து கொண்டு சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று ராஜேஷ்ஷூம், சிவரஞ்சினியும் இருந்த புகைப்படத்தை காண்பித்து இந்த பெண் காதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் திருமணம் செய்ய முடியாது , எனவே நாங்கள் நிச்சயதார்த்திற்க்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடு என கேட்டுள்ளார்கள்.

மேலும் இந்த திருமணம் நடைபெறாது எனக் கூறி சிவரஞ்சனியின் குடும்பத்தினர் உடன் உள்ள திருமண உறவினை துண்டித்தனர்.

திருமணம் தடைபட்டதால் ஆவேசமடைந்த சிவரஞ்சனியின் குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தனர் .

சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் ராஜேஷ் புகைப்படம் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது .

கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ராஜேசை சாலவாக்கம் காவல் துறையினர் கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்பு காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

டிஎன்பிஎஸ்சி படிக்க வந்த பெண்ணை ஐந்து வருடமாக காதலித்து திருமணம் செய்ய மறுத்தது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில் புகைப்படத்தினை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து திருமணம் தடை செய்த கிராம நிர்வாக அலுவலரின் வக்கிர புத்தி கண்டிக்கத்தக்கது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Views: - 433

0

0