ராதிகாவை அம்மா என கூப்பிட மாட்டேன்.. வரலட்சுமி சரத்குமார் பேசிய அதிரடி வீடியோ வைரல்.!

Author: Rajesh
20 June 2022, 7:49 pm
Quick Share

வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் . தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் தான் ராதிகாவை அம்மா என கூப்பிடமாட்டேன் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். ராதிகா என் அம்மா என்று தான் பலரும் நினைகிறார்கள். ஆனால் அவர் என் அம்மா இல்லை. அவர் என் அப்பாவின் இரண்டாம் மனைவி அவ்வளவு தான்.

அதற்காக நான் ராதிகா ஆன்டியை வெறுக்கிறேன் என்றில்லை. எங்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருக்கிறது. அவரை ஏன் aunty என கூப்பிடுகிறேன் என பலரும் கேட்பார்கள். ஏனென்றால் அவர் என் அம்மா இல்லை. என்னுடைய உண்மையான அம்மா தான் எனக்கு அம்மா. அதனால் ராதிகா எனக்கு aunty தான். ஆனாலும் அவர்கள் இருவரையும் ஒரே அளவுக்கு மதிக்கிறேன். இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்து இருக்கிறார்.  அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 155

3

0