வாக்காளர்களை கவர விதவிதமான பரிசுப்பொருட்கள் : வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ், பணம்.. விதிகளை மீறி விநியோகிக்கும் திமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 2:38 pm

கோவை : கோவையில் வாக்காளர்களை கவர திமுக வேட்பாளர்கள் வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ் மற்றும் ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை பணம் ஆகியவற்றை விநியோகித்து உச்சகட்ட தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. நாளையுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ,கோவையில் வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர் திமுக வேட்பாளர்கள். ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்களை கணக்கெடுக்கின்றனர். தொடர்ந்து எந்த வீட்டில் எல்லாம் பெண்கள் ஓட்டு உள்ளதோ அங்கெல்லாம் வெள்ளி கொலுசை வழங்குகின்றனர்.

ஒரே வீட்டில் இரண்டு பெண் வாக்காளர்கள் இருந்தால் அங்கு இரண்டு ஜோடி கொலுசு வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஹாட்பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர ஒவ்வொரு வார்டு திமுக வேட்பாளரும் தங்களது சக்திக்கு ஏற்ப ஓட்டுக்கு ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை பணத்தை விநியோகம் செய்ய துவங்கியுள்ளனர்.

தேர்தல் தேதிக்கு ஒரு சில தினங்கள் முன்பு விநியோகம் செய்தால் தான் மக்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இன்று காலை முதல் விநியோகத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெட்ட வெளிச்சமாக அரங்கேறும் இந்த தேர்தல் விதிமீறல்களை கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பதாகவும், கேள்வி கேட்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பாரபட்சம் பார்க்காமல் டிரான்ஸ்பர் செய்வதால் இப்போது கேட்க ஆள் இல்லாமல் திமுக.,வினர் உச்சகட்ட விதிமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, தொடர்ந்து விதிமீறல்கள் அரங்கேறுவதால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 1626

    0

    0