காங்கிரஸ் கட்சியில் பயணிப்பேன் : வசந்தகுமார் மகன் விஜய் வசந்த்!!

4 September 2020, 10:44 am
vijay Vasanth - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தந்தையின் வழியில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பயணிப்பேன் என்று மறைந்த எம்.பி வசந்த்குமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் 7- வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டு செய்யப்பட்ட மௌன ஊர்வலம் குழித்துறை -யில் இருந்து துவங்கி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இந்த மௌன ஊர்வலத்தில் அனைத்து கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், மனோ தங்க ராஜ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைத்து கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தபட்டது.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த கன்னியாகுமரி பராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் மகனும், நடிகருமான விஜய் வசந்த், எங்களுடைய தந்தை உழைப்பால் உயர்ந்தவர். அவருடைய உழைப்பை முன் உதாரணமாக கொண்டு நாங்கள் அவர் செய்த பணிகளை தொடர்ந்து செய்வோம். அவர் தனது தொகுதிக்காக பல்வேறு பணிதிட்டங்களை செய்ய நினைத்து இருந்தார். அவருடைய மறைவை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

எங்களுடைய தந்தை வழியில் காங்கிரஸ் கட்சி- யில் தொடர்ந்து பயணிப்போம். அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவதை குறித்தோ எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. எந்த முடிவு எடுத்தாலும் குடும்பத்துடன் பேசி முடிவு எடுப்போம் என அவர் கூறினார்.

Views: - 5

0

0