“கடவுள் தவறு செய்து விட்டார்” – வசந்த குமார் மறைவுக்கு கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி..!

29 August 2020, 12:15 pm
Quick Share

வசந்த குமாரின் மறைவு கட்சிக்கும், சமூகத்திற்கும் பெரும் இழப்பு என, கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , காங்கிரஸ் எம்.பி வசந்த குமார் நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டிருந்த வசந்த குமார் உடலுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, வசந்த குமாரின் மறைவு கட்சிக்கும், சமூகத்திற்கும் பெரும் இழப்பு என குறிப்பிட்டார். மேலும், வசந்த குமாரின் மறைவை பார்க்கும் போது “கடவுள் தவறு இழைத்துவிட்டாரோ” என தோன்றுகிறது என்று அழ்ந்த உருக்கத்துடன் தெரிவித்தார்.

Views: - 53

0

0