அரக்கோணம் சம்பவத்தை வைத்து சாதி மோதலை உருவாக்க விசிக நினைக்கிறது : எல்.முருகன் குற்றச்சாட்டு!!

16 April 2021, 12:52 pm
Murugan Slams VCK -Updatenews360
Quick Share

மதுரை : அரக்கோணம் விவகாரத்தை முன் வைத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் ஜாதி மோதலை உண்டாக்க நினைக்கிறது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடிக்கப்பட்டனர். இதை கண்டிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். “அம்பேத்கர் பிறந்த நாளுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது, அம்பேத்கர் ஒரு சாதி தலைவராக அடையாளப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, பாஜக தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரை பெருமைபடுத்தியுள்ளது, அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர் மட்டுமே, ஒரு சாதி தலைவர் அல்ல, அம்பேத்கர் புகழை பாஜக உலகம் முழுதும் எடுத்து செல்கிறது என கூறினார்.

மதுரையில் விசிகவினர் பாஜகவினர் மீது திட்டமிட்டு தாக்குதல் செய்து வருகின்றனர், தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், திருமாவளவன் ஜாதி அரசியலை கையில் எடுத்து உள்ளார் என குற்றம்சாட்டினார்.

அரக்கோணம் இரட்டை கொலை இரண்டு நண்பர்களுக்கு உள்ளான மோதலாகும், அரக்கோணம் விவகாரத்தை வைத்து விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் ஜாதி மோதலை உண்டாக்குவதே நோக்கம், திருமாவளவன் அடிப்படை அரசியலை இழந்து ஜாதி அரசியலை கையில் எடுத்து உள்ளார், கொரோனாவை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது” என கூறினார்

Views: - 44

0

0