வேதா இல்லம் கையகப்படுத்தியது தொடர்பான வழக்கு…! ஆக.12ம் தேதி கோர்ட்டில் விசாரணை

10 August 2020, 1:09 pm
Quick Share

சென்னை: வேதா நிலையம் இல்லம் கையகப்படுத்தியது தொடர்பான வழக்கு வரும் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா காலமான நிலையில் 2017ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரின் போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து,.நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால்  வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு ஜெ. தீபா, தீபக் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. ஆகையால் போயஸ் தோட்ட இல்லத்தை விலைக்கு வாங்கும் வகையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033ஐ டெபாசிட்டாக செலுத்தியது.

இழப்பீட்டுத் தொகை செலுத்தியதால் போயஸ் தோட்ட வீடு  அரசு உடைமையானது என்று அறிவிக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகை பெற வேண்டிய உரியவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டது போன்று நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது  என்றும் தமிழக அரசு தெளிவுப்படுத்தியது.

இந்நிலையில் அரசு நடவடிக்கைக்கு எதிராக ஜெ.தீபா, தீபக் இருவரும் தொடந்த வழக்கு வரும் 12ம் தேதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Views: - 9

0

0